(22-09-10 தேதியிட்ட விகடன்;
அட்டைப்படத்தில் சோ, விக்ரம், சசிக்குமார் மற்றும் ஒருநடிகை; எனக்கு பெயர் தெரியவில்லை. மன்னிக்கவும் )
நீங்கள் ஆனந்த விகடன் வாங்கிய உடன் முதன் முதலில் படிப்பது எதுவாக இருக்கும்?
என் சாய்ஸ் நானே கேள்வி.. நானே பதில்.. இந்த வாரம்
பெரும்பாலானவைகள்முதல்வர்கருணாநிதியை வாருவதாகவே
இருந்தது.
சினிமா விமர்சனத்தில் இப்பொழுதெல்லாம் மார்க்குகளை வாரி வழங்க ஆரம்பித்து விட்டார்கள்.(விலைவாசி உயர்வின் பாதிப்போ).
எந்திரன் ரீலீஸை முன்னிட்டு தமிழக அரசு பொதுவிடுமுறை என வலை பாயுதே-வில் kanapraba@twitter.com கலாய்த்திருந்தது
ரசிக்க வைத்தது.
விக்ரம் பேட்டியில் எப்பொழுதும் மனசைத்தொடும் வார்த்தைகள் இருக்கும். இந்த முறை அது மிஸ்ஸிங். " நல்லா நடிச்சிருக்கே!னு தோளில் தட்டிக்கொடுங்க. அது இன்னொரு நடிகரைக் காயப்படுத்தி வரும்னா...எனக்கு வேண்டாம். படம் பார்த்திட்டு 'உன்னைப் பார்க்க மதம் பிடித்த யானை மாதிரி இருக்கு'ன்னு பாலா சொன்னார். மனசிலிருந்து வந்த வார்த்தைகள்.. விக்ரம் எப்பவும் டைரக்டர் சாய்ஸ் நடிகன்.
மனம் கொத்திப் பறவை-யில் சாரு நிவேதிதா ஃபேன்மன் பற்றி சுவாரசியமாக விவரித்திருந்தார்.
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இதுவரை தேசிய விருதோ,தமிழ்நாடு அரசு விருதோ கிடைக்கவில்லை என்பது உண்மையிலேயே பேரதிர்ச்சியான விஷயம் தான்.
"காவி உடையைப் பயங்கரவாதத்தோடு ஒப்பிட்டு ப.சிதம்பரம் பேசியது நியாயமா?" என்ற கேள்விக்கு பயின்ட்களை அடுக்கி மதன் பதிலளித்திருந்தது சூப்பர். (வக்கீல்கள் கவனிக்கவும்)
"முழுவதும்
நிரம்பியக் கோப்பையை
மேலும் நிரப்ப இயலாது"
என்ற ஜென் கவிதையை வைத்து இந்த வார "நீயும் நானும்"-ஐ நகர்த்தியிருக்கிறார் கோபிநாத்.(அந்த கவிதையைக் குறிப்பிடாமலேயே). "தேவை இல்லாதவற்றை விரட்டுங்கள்... உங்களுக்கு தேவைப்படுவது தானாக வரும்.." என்ற தமிழருவிமணியனின் வரிகளை அழகாக பயன் படுத்தியிருக்கிறார்கோபி நாத். 'எல்லா பாறைகளுக்குள்ளும் ஒரு சிலை இருக்கிறது" என அழகாக முடித்ததும் அருமை.
தங்கர் பச்சானின் சிறுகதை வார்த்தைகளின் பிரயோகத்தால் மனசுக்குள்ஊடுருவுகிறது. கதையில் தெறிக்கும் உண்மைகள் மனசை வலிக்க வைத்தாலும் நம்மால் என்ன செய்யமுடியும் பச்சான்.(ராசதுரை போலவே இயலாமை மேலிடுகிறது நமக்கும்).
சொல்வனத்தில் பெயரெனப்படுவது யாதெனில்...கவிதை
படித்ததும் பிடித்தது. எங்கே இருக்கிறது குதிரைக் குட்டி கவனிக்க வைத்தது. இறுதியாய் வருகிறார் வாலி என எதிர்ப்பார்ப்பை கூட்டியிருக்கிறார்கள்.
அவலுடன் காத்திருக்கிறேன் அடுத்த வார விகடனுக்காக..
தீதும் நன்றும் பேச வந்திருக்கிறோம். எது தீது,எது நன்று என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள். எங்களுக்கு தீதாய் தெரிவது உங்களுக்கு எப்படி தெரிகிறது, என்பதை தெரிந்துக்கொள்ள காத்திருக்கிறோம்.
21 September 2010
16 September 2010
வலி....
(தேசாந்திரி மற்றும் ஊர் சுத்தியைத் தொடர்ந்து„ உங்களுடன் சிறுகதையுடன் இணைவது.....By பொம்மி)
நான் வால்பாறை பேருந்து நிலையத்தில் எனது ஊருக்கு
செல்வதற்காக காந்திருந்தேன்.இன்னும் 10 நிமிடங்கள் இருப்பதால் காலை உணவு சாப்பிட போதுமான நேரம் இருப்பதாக எண்ணி,பக்கத்தில் பெரிய உணவு விடுதிக்கு சென்றேன். அளவான கூட்டம் இட்லிக்கு ஆர்டர்
கொடுத்தேன்.பின்னர்,ரோஸ்ட் ஆர்டர் கொடுத்தேன். ரோஸ்ட் வர தாமதமானது. பஸ் வரும் நேரமானதால், பாதி ரோஸ்ட்டை இலையில் வைத்து விட்ட கர்வத்தோடு, பணியாளை கோபமாக திட்டினேன்.
அவனும் சளைக்காது பதிலளித்தான்,"இங்கே லேட்டாகும் தெரிச்சுதானே வந்தே, உனக்கு காசு இருக்கிற திமிரா?" என்ற அவனின் வார்த்தைக்கு பதில் சொல்ல நேரமில்லாது, பில் தொகை ரூபாய் 55 ஐ வைத்து விட்டு விரைந்தேன்.
ஒடிவந்து பஸ்ஸில் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு பஸ்ஸில் சீட் பிடித்து ஒரத்தில் ஒட்டிக் கொண்டேன். ஏற முடியாத சின்ன மாணவிகள் பின்னாலே பெரிய மூட்டைகளுடன் பஸ்ஸில் நிரம்பினர்.பஸ் நகர தொடங்கியது, தோள் பட்டையில் ஊசி குத்திய போன்ற வலி. ஏற்கனவே,உணவகத்தில் ஏற்பட்ட அவமானம் குத்திய திசை நோக்கி ஆத்திரமாய் திரும்பசெய்தது. இருப்பினும் அமைதி காத்தேன்...அங்கே, இரு பள்ளிச்சிறுமிகள் சுவாரசியமாக நேற்றைய நிகழ்ச்சிகளைஅசைபோட்டனர்.தொடர்ந்து அவர்களுடைய ஆசிரியர்களை இன்று எதிர் கொள்வதுஎப்படி என்ற பல்வேறு யுக்திகளை பற்றி பேசிக்கொண்டு வந்தனர்.
அடுத்த நிறுத்தில் மேலும் ஆட்கள் ஏற,இன்னும் கூட்டம் அதிகமானது, குத்தியது யார் என்று அறிய முயற்சித்தேன். முடியவில்லை.
பேச்சு தெளிவாக கேட்டது.
"ஏண்டி ரம்யா, என்ன சாப்பிட்டே?"
"போடி, அம்மா நேரத்தில் கூலி வேலைக்கு போய்ட்டாங்க, சாப்பாடு செய்ய நேரமில்லை".
"அடி, அப்புறம் என்ன பண்ணினே"
"இரண்டு ரூபா தந்தாங்க, மத்தியானம் சத்துணவு
சாப்பிடணும்"
இப்போது கூட்ட நெரிசலில் ஊசி குத்தல் அதிகமானது. திரும்பி பார்த்தேன்.இடது கையில் தொங்கிய பையில் எட்டிப்பார்த்த பென்சில் என் தோள் பட்டையை குத்திக் கொண்டிருந்தது. வலது கையில் அந்த சிறுமி இரண்டு ரூபாய் நாணயத்தை இன்னொரு சிறுமிக்கு காட்டிக்கொண்டுருந்தாள். "உனக்கு காசு இருக்கிற திமிரா?" வார்த்தைகள் ஊசி
போன்று குத்தியது. வாழ்க்கைப்பாடத்தின் ஏதோ ஒரு வரிக்கான அர்த்தம் புரிந்த்து போல் இருந்தது. இப்போது வலது பக்கம் தோளும், இடது பக்கம் இதயமும் வலித்தது.

Labels:
சிறுகதை..
15 September 2010
பாலாவின் படைப்புலகம்...By தேசாந்திரி
பாலா,பார்த்திபன்,நாசர் போன்றோரின் படங்கள் வெளியாகும் போது, "கண்டிப்பா பாருங்க" என நண்பர்களிடம் சொல்லி,படம் நல்லா இல்லாமல் போனபின் நான் தலைமறைவாவது என் வாழ்க்கையில் அடிக்கடி நடக்கும் விஷயம்.
திரையில் இலக்கிய படைப்புகளைத்தரும் டைரக்டர் பாலாவின்படைப்புலகம்ஆச்சரியங்களும்
,முரண்பாடுகளும் நிறைந்தது. பாலாவின் கதைக்களம் யாரும் தொடாத விஷயங்களைத் தொட்டுச்செல்வது. வித்தியாசமான படம் எடுப்பவர்களின் படங்களில் வருவதைப் போன்றபுகைப்படர்ந்தகாட்சிகள்,
யதார்த்தமானசண்டைக் காட்சிகள் என்பதைத்தாண்டி, பாலாவின்படங்கள் மனசுக்குள் பரவும்.
நிறைய படங்கள் கொடுக்க வேண்டும் என்பதைத் தாண்டி, மகேந்திரன் போன்று குறைந்த படங்களை தரமானதாக தரவேண்டும் என்ற கவனம் பாலாவின் படங்களில் தெரியும். அடுத்தக் காட்சி என்ன என்பதை கணிக்க முடியாத திரைக்கதை அமைப்பு பாலாவின் மிகப்பெரியபலம்.
காமெடிக்காட்சிகள் கூட மனசை ஊடுவருவி , தன்னை மறந்து சிரிக்க வைக்கும். கேமிரா நகரும் திசை கூட ரசனைக்குரியது.எந்த வித பில்டப்பும் கொடுக்காமல், முக்கிய கதாபாத்திரம் கூட இறந்துபோக நேரிடும். கதைக்களம் பயமின்றி சுடுகாட்டிலிருந்துகூடத்தொடங்கும்.
கதைநாயகனின் வாழ்க்கை, பஞ்ச் டயலாக் இன்றி, தன்னை சுற்றி இருப்பவர்களை வைத்து புகழ்ந்துக் கொள்ளுதல் இன்றி, தன் பெருமைகளைத் தானே பறைச்சாற்றிக் கொள்ளும்துவக்க பாடல் இன்றி; இயல்பாய் ஓடும் நதியைப் போல நகரும்.
நடிக்கும்நடிகர்க்கு திரையுலகில்,முகவரி கொடுக்கும்.
படத்தில் பங்கு பெறும் அனைவருக்கும் சாதனை களமாகவே தெரியும். ரசிகர்களும் என்னவென்று கணிக்க முடியாத பதைபதைப்பு மனசுக்குள் இருக்கும்.
சேது தொடங்கி நந்தா, பிதாமகன், நான் கடவுள் என பாலா படைப்புகளில் இவையெல்லாம் தெளிவாய் தெரியும். சிலர் ஒரே மாதிரியான படங்கள் என சாடுவது உண்டு.மொத்ததில் பாலாவின் படங்கள் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, விமர்சர்களுக்கும் நல்ல தீனி என்பது தேசாந்திரியின் முடிவு.
பாலாவின் குருநாதர் பாலு மகேந்திரா மற்றும் இளையராஜா ஆகியோர் இனி நிழல்மனிதர்களைப் பற்றி கதைக்களம் அமைக்க வேண்டாம் என்று வேண்டி,கிட்டதட்ட சத்தியமே வாங்கியிருக்கிறார்கள் என்பதால் பாலாவின் படைப்புலகம் எப்படி மாறியிருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

டைரக்டர் பாலா.
13 September 2010
"ஊர் சுத்தி".
அனைவருக்கும் வணக்கம். நான் "ஊர் சுத்தி". இந்த "தீதும் நன்றும்" வலைப்பூ வாயிலாக தற்போது உலகை சுத்த கிளம்பி இருக்கிறேன்.
அரசுப்பள்ளியின் ஆசிரியர் என்பது தான் என் அடையாளம். எங்கள் பள்ளிக்கு சென்ற வாரம் ஆண்டாய்வுச் செய்ய முதன்மைக்கல்வி அதிகாரி வந்திருந்தார். திடீர் ஆய்வு என்பதற்கும் ஆண்டாய்வு என்பதற்கும் என்ன வேறுபாடு என்றால், திடீர் ஆய்வுவில் அதிகாரி சிறிது நேரம் இருப்பார். ஆய்வின் முடிவில் ஜீப் டீசல் என்ற வகையில் ஐநூறு செலவழியும். ஆண்டாய்வில் எல்லாம் கொஞ்சம் அதிகரிக்கும். இந்த முறை ஆய்வின் போது உடற்கல்வி ஆசிரியர் மாணவர்களை "மாஸ் டிரில்" செய்ய வைத்தார். அதில் அதிகாரிக்கு திருப்தி இல்லை. "நான் ஆண்டாய்வுக்கு வருகிறேன் என்பதை இரண்டு மாதத்திற்கு முன்பே தெரியப்படுத்திவிட்டேன், இருந்தும் இவ்வளவு தானா பயிற்சி கொடுக்க முடிந்தது?" என அதிகாரி உடற்கல்வி ஆசிரியரை சாடினார். அடுத்த மாதம் வருவேன், அப்போதாவது நன்றாக செய்ய வேண்டும்" என்பது இறுதிக்கெடு.
அறிவிப்பு கொடுத்து விட்டு வரும் அதிகாரிகளும், அசைந்துக்கொடுக்காத ஆசிரியர்களும் எப்படி அரசு பள்ளிகளின் தரத்தினை உயர்த்தப்போகிறார்கள். தரம் உயர்த்துவதற்காகச் செய்யப்பட்டு வந்த ஆண்டாய்வு வெறுமனே சடங்காக மாறி விட்ட இன்றையச் சூழலில், ஆண்டாய்வு என்பதற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை இந்த ஊர் சுத்திக்கு....

அரசுப்பள்ளி ஆண்டாய்வு
11 September 2010
"தேசாந்திரி"
நாங்கள் என்பதில் இப்போது உங்களுடன்
இணைந்திருப்பது "தேசாந்திரி".
• "தேடி சோறு நிதம் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பலசெயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென பின் மாயும்
பல வேடிக்கை மனிதரை போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
-மகாகவி பாரதியார்.
வழிப்போக்கனாய்,நாடோடியாய்,தேசாத்திரியாய் உலவும் எனக்கு பெரியதாய் லட்சியமில்லை.
அனால் ....
வேடிக்கை மனிதர்களை அடையாளம் கண்டுக்கொள்ளுவது இப்போதைய வேலை.எனெனில் வீழாமல் இருக்க விருப்பம் எனக்கு...
ஆதலால்...
அன்புள்ள அனைத்து நண்பர்களுக்கும்...
நாங்களும் வலைத்தளத்தில் எழுத வந்துவிட்டோம்.
http://www.thethumnandrum.blogspot.com/
thethum என்பதில் ஒரு e மட்டுமே வரும் என்பதனை
கவனிக்கவும்..

Subscribe to:
Posts (Atom)